யார் தரும் விருதையும் விட நம் மண்ணின் கலைஞர்களை கெளரவிக்கும், அவர்களை அரண் போல பாதுகாக்கும் இந்த அவை தரும் அங்கீகாரத்தை பெரும்பேறென ஏற்று வணங்குகிறேன். என் மாடத்தியின் தொழில்நுட்ப கலைஞர்களின் குழுவிற்கும், நடிகர்களுக்கும், அணவன்குடியிருப்பு மற்றும் விக்ரமசிங்கபுரத்து மக்களுக்கும், இந்தப்படத்தை மக்கள் பங்கேற்பு சினிமாவாக உருவாக்க உறுதுணையாக நன்கொடை அளித்த என் வாசகர்களுக்கும் சமூக வலைத்தள நண்பர்களுக்கும் கூட்டு தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.

வெகு தூரத்தில், கானகத்தின் மத்தியில் படப்பிடிப்பில் இருப்பதால் நேரில் பங்கு கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். என் வேண்டுகோளை ஏற்று விருதைப் பெற்றுக் கொள்ளும் எங்கள் மாடத்தி செம்மலருக்கு அன்பை சொல்வதோடு விருது பெறும் சக கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்